Rapperswil-Jona SG : பொது உடமைகளில் வண்ணம் தெளித்த மூவர் கைது.! பொது உடமைகளில் வண்ணங்களை தெளித்து திரிந்த மூன்று இளைஞர்கள் சென்ட்காலன் மாகாணம் Rapperswil பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
ஞாயிற்றுக்கிழமை இரவு (பிப்ரவரி 19, 2023), முகமூடி அணிந்த மூன்று நபர்கள் Schönbodenstrasse ல் வண்ணங்கள் தெளிப்பதை ஒரு குடிமகன் கவனித்து, கன்டோனல் போலீசாரின் அவசர அழைப்பு மையத்திற்குத் தெரிவித்தார்.
Rapperswil
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 17 மற்றும் 20 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் 18 வயது இளைஞரும் பின்னர் அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட மூன்று சுவிஸ் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
பல பொது உடமைகளை வண்ணங்கள் மூலம் சேதப்படுத்தியதாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.