சுவிட்சர்லாந்தில் நுழைவு தடை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்திற்கான நுழைவு தடைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. நாட்டின் கூட்டாட்சி காவல்துறை அமைப்பான Fedpol வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 614 நுழைவு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகமாகும்.
இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டதுதான் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய சட்ட அமலாக்க அமைப்பான Europol வழங்கிய தகவல்களின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசித்து வரும் Islamic State (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நபர்களில் அனைவரும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்றவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் நிலை “உயர்ந்துள்ளது” என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், மேலும் இளம் வயதினரிடையே தீவிரவாத சிந்தனைகள் பரவும் போக்கு அதிகரித்து வருவதால், எந்தவித ஆபத்தையும் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே, சாத்தியமான அபாயங்களை முன்னதாகவே கட்டுப்படுத்தும் நோக்கில், நுழைவு தடைகளை விதிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டவில்லை என்று Fedpol தெரிவித்துள்ளது.