சூரிச் பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தின் University of Zurich ரெக்டர் Michael Schaepman, மாணவர்களின் அரையாண்டு கட்டணத்தை உயர்த்தும் யோசனையை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். கட்டணம் அதிகரித்தால், மாணவர்கள் செலவுகளை சமாளிக்க வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, படிப்பு காலம் நீளும் அபாயம் உள்ளது என அவர் கூறினார்.
தற்போது 720 சுவிஸ் பிராங்குகள் இருக்கும் கட்டணம் எந்த சந்தை அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல; இது வரலாற்று காரணங்களால் உருவான தொகை எனவும் Schaepman விளக்கினார். கட்டண உயர்வு சமூக முன்னேற்றத்தையும் பாதிக்கக்கூடும், ஏற்கனவே மாணவர்களின் கல்வித் தேர்வில் குடும்பத்தின் பொருளாதார நிலை பெரிய பங்காற்றுகிறது என்றும் அவர் எச்சரித்தார்.

பல்கலைக்கழக நிதிநிலையைப் பொருத்தவரை, இந்த கட்டணங்கள் மொத்த வருவாயில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதால், அதை உயர்த்துவதால் பெரிதாக நிதி பலன் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, Zurich நகரில் வாழும் செலவு ஏற்கனவே அதிகமாக உள்ளதால், கூடுதல் கட்டணங்கள் சில மாணவர்களை இங்கு படிக்கத் தயங்கச் செய்யும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக, வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடித்த பின் சில ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வேலை செய்து வரி செலுத்த வேண்டும் என்ற யோசனையை Schaepman முன்வைத்துள்ளார்.