லூசர்ன் நகரில் உள்ள பெர்ன்ஸ்திராஸ்ஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திங்கள்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் போது ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளனர். திங்கட்கிழமை (ஜனவரி 29, 2024, மதியம் 12:00 மணியளவில்) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லுசேர்ன் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Luzerner zeitung
லுசேர்ன் நகர தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடுஇ அவசர சேவைகளால் கட்டிடத்தில் இருந்து ஒன்பது பேர் வரையில் வெளியேற்றப்பட்டனர்.
புகையை சுவாசித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அவசர சேவை 144 மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், குடியிருப்பில் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Luzerner zeitung
குறித்த சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்இ இத்தீவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லூசேர்ன் போலீசார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.