லுசேர்ன் Meggen பகுதியில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது கடந்த ஞாயிற்றுக்கிழமை லுசேர்ன் Meggen பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடு ஒன்றினுள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 31.12.2023 அன்று லுர்சேர்ன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மோப்ப நாய்களுடன் குறித்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் வைத்து அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்த ஒருவர் குற்றத்தின் வலுவான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.