சுவிஸ் மாகாணம் ஒன்றில் தீயில் கருகி உயிரிழந்த பல உயிர்கள் லுசேர்ன் கன்டோன் ஹிட்ஸ்கிர்ச்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மூவர் லேசான காயம் அடைந்தனர் எனவும் மொத்தம் எட்டு பூனைகள் இறந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் தற்போது தெரியவில்லை. விபத்து தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று மதியம் ஒரு மணிக்கு முன்னதாக ஹிட்ஸ்கிர்ச்சில் உள்ள இண்டஸ்ட்ரீஸ் திராஸ்சவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக லூசர்ன் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
(c) Lucerne Police
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இருவருக்கு புகை காரணமாக சுவாச கோளாறுகள் ஏற்பட்டு அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பில் ஏழு பூனைகள் இறந்துள்ளதாகவும் மற்றொன்று கால்நடை மருத்துவரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல பூனைகள் தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை. லுசேர்ன் போலீசார் மற்றும் தீயணைப்பு புலனாய்வாளர்களின் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.