லுசேர்னில் முன்னாள் மனைவியை கொலை செய்த முயற்சித்த நபர் லூசர்ன் நீதிமன்றத்தில் முன்னாள் மனைவியை கொலை செய்த முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
43 வயதான குறித்த நபர் லூசேர்ன் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாயன்று ஆஜரானார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது முன்னாள் மனைவியை பயமுறுத்த மட்டுமே விரும்பியதாகவும் அவளை காயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சமையலறைக் கத்தியால் குத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 2021 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தனது முன்னாள் மனைவியை தீ வைத்து கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. குற்றவாளி தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல முயன்றதாகவும்இ இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் குறிப்பிடப்பட்ட தடயவியல் மனநல அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சித்தப்பிரமையால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அவர் தற்போது ஒரு மனநல மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.