சுவிஸில் நள்ளிரவில் உணவகத்தை உடைத்து திருட்டு இன்று (24/9/23) அதிகாலை கன்டோன் சென்ட் காலன் மாநிலத்தில் உள்ள கொசாவ் என்ற இடத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வீதியில் உள்ள ஒரு உணவகத்தின் ஜன்னலை உடைத்து இத்திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளே நுழைந்த அடையாளம் காணப்படாத குறித்த நபர் அங்கிருந்த சுமார் 2000 பிராங்க் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.