லூசேர்ன் இல் எண்ணெய் லாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.!! அக்டோபர் 16 திங்கட்கிழமை மதியம் 2:15 க்கு சற்று முன்பு Eschenbach இல் Rothenburgstrasse இல் ஒரு டேங்கர் டிரக் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
MORE LUZERN NEWS CLICK HERE
எண்ணெய் ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டியே இவ்விபத்துக்கு உள்ளானது. மேலும் இதன் போது எண்ணெய் கசிந்து வீதியில் சிந்தியமையை காணமுடிந்தது. மீட்பு மற்றும் துப்புரவு பணிகளுக்காக குறிப்பிட்ட வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீட்பு பணிகளை லுசேர்ன் தீயணைப்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். மேலும் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை லுசேர்ன் கன்டோன் போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source:- Luzerner Polizei