சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மனித மலங்களை சேமிக்கும் வங்கி..! சுவிஸ் சூரிச் நகரில் புதிய வங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வங்கி என்றால் பணம் நகை சேர்த்துவைக்கும் வங்கி எனவோ அல்லது ரத்த வங்கி என்றோ நினைத்துவிடவேண்டாம்.
மனித மலங்களை சேர்த்து வைக்கும் வங்கியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றால் நம்பமுடிகிறதா.? ஆம் சூரிச் பல்கலைக்கழகத்திலையே குறித்த வங்கி அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞானிகள் ஏற்கனவே 2,500 வகையான மலங்களை சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மனித குடலில் இருக்கும் முக்கியமானதும் விரைவில் அழிந்துபோகக்கூடியதுமான நுண்ணுயிர்களை பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எமது எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது. இச்செயற்பாடுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.