Image default
Swiss informations

நாய், பூனைகளை உண்ணும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

என்னென்னவோ விடயங்களுக்கு பேர் பெற்ற சுவிட்சர்லாந்துக்கு, தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளான பூனைகளையும் நாய்களையும் உண்பவர்கள் சுவிஸ் நாட்டவர்கள் என்னும் ஒரு பெயர் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சட்டப்படி செல்லப்பிராணிகளை உண்ணலாமா?

சுவிட்சர்லாந்தில், மக்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகள் மற்றும் நாய்களை சமைத்து உண்ண சட்டப்படி அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், சுவிஸ் மக்களுக்கு, வீட்டில் வளர்க்கும் நாய்களையும் பூனைகளையும் உண்பவர்கள் என்ற பெயர் பரவலாக இருந்ததாம்.

23 64fc25545bfb8

வறுமை காரணமாக, Ticino மாகாணத்தின் சில பகுதிகளில், பூனை இறைச்சியை, கூடையில் இருக்கும் கோழிக்கறி என்பார்களாம். அதாவது, இறைச்சி எதுவும் இல்லாவிட்டால், எப்போது வேண்டுமானாலும் பூனையைக் கொன்று சமைக்கலாம் என்பது அதன் பொருள்.

Do the Swiss eat cats

சில விதிமுறைகள்

சுவிட்சர்லாந்தில், மக்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகள் மற்றும் நாய்களை சமைத்து உண்ண சட்டப்படி அனுமதி உள்ளது என்றாலும், அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

Do the Swiss eat cats

ஒருவரது வீட்டில் வளர்க்கப்படும் பூனையையோ நாயையோ அவரது குடும்பத்தினர் மட்டுமே உண்ணலாம்.விருந்தினர்களுக்கோ, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கோ இறைச்சியைக் கொடுக்கக்கூடாது.

23 64fc255409a35

ஒரு தொழில் முறை இறைச்சி வெட்டுபவர் மட்டுமே, மனிதாபிமான முறையில் பூனையையோ நாயையோ கொல்லலாம். அதைக் கொடுமைப்படுத்திக் கொல்லக்கூடாது.

பூனை அல்லது நாய் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது, அதைக் குறித்து விளம்பரமும் செய்யக்கூடாது, வேறெங்கும் சேமித்து வைக்கவும் கூடாது.

ஆனால், இப்போதும் சுவிஸ் நாட்டவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளான பூனை அல்லது நாய்களை உண்ணுகிறார்களா என்பது தெரியவில்லை.

Advertisements

Related posts

சாக்லேட் சாப்பிடுங்கப்பா.. : சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய ஆய்வு

admin

மொழியை மாற்றிக்கொள்ளும் சுவிஸ் நகராட்சிகள் – சுவாரசிய தகவல்-1

admin

சுவிற்சர்லாந்தில் விரைவாக குடியுரிமை பெறுவது எப்படி..?

admin