ஆர்காவ் கன்டோனில் தீயில் கருகிய வாகனங்கள்- திணறிய போலீசார்.!! ஆர்காவ் கன்டோனில் உள்ள பள்ளி வளாகத்திற்கு அருகாமையில் பயங்கர வாகன தீ விபத்து ஒன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் வாகனம் தீப்பற்றி எரிவதாக குடியிருப்பாளரர்களின் முறைப்பாட்டை அடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Quelle der Meldung: Kapo AG
தீயணைப்பு துறையினர்சம்பவ இடத்திற்கு வரவதற்கு முன்னரே அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் தீ மளமளவென பரவி அதுவும் தீயில் முற்றாக கருகியிருந்தது.
உடனடியாக அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போதிலும், வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பபடவில்லை எனவும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கன்டோனல் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை அல்லது நேரில் கண்ட சாட்சிகளை தெரிந்த யாரும் போலீசாருக்கு அறிவிக்கும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.