சுவிசில் வாகனம் செலுத்தி கொண்டு வீடியோ எடுப்பவரா நீங்கள்.. எச்சரிக்கை.!! சுவிற்சர்லாந்தின் லுசேர்ன் மாகாணத்தில் வாகன ஓட்டுனர்களுக்காக போலீசார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள். வாகனம் ஓட்டும் போது தொலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அது குறித்து மேலும் தெரியவருகையில் :- குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் வாகனம் ஓட்டும் போது அழைப்பினை ஏற்படுத்துவதோ அல்லது வருகின்ற தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிப்பதோ ஆபத்தான ஒரு விடயம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு 100 CHF வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கின்றபொழுது குறுந்தகவல்கள் அனுப்புவதோ அல்லது குறுந்தகவல்களை படிப்பதோ விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடைய ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் கணிசமான அளவு அபராதம் விதிக்க விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு வாகன ஓட்டுனர்கள் அலட்சியமாக செயல்படுகின்ற பொழுது காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு பகுதியை மட்டுமே செலுத்துகின்றது. ஆகையால் ஓட்டுநர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளும் படியும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அது மாத்திரமன்றி வாகனம் ஓட்டும் போது காணொளி எடுக்கும் எவரும் மிக அதிகமான அபராதங்களை கட்ட நேரிடும் எனவும் போலீசார் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.எனவே வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதால் அதிக பின் விளைவுகள் ஏற்படும் என்பதாலும் அது சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த தகவல்களை அறிந்து கொள்ளும் படியும் போலீசார் மேலும் தெரிவித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக வாகனம் செலுத்திக் கொண்டு காணொளி பதிவினை மேற்கொண்ட பலர் தங்களது காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருப்பதை பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் போலீசார் மேலும் குறிப்பிட்டனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.