Schaffhausen மாகாணத்தில் நகை திருடிய போலீ போலீசார்..! எச்சரிக்கை.! சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் மோசடி அண்மைக்காலமாக இடம் பெற்று வருகிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு Schaffhausen மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் பிப்ரவரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சப்ஹவுசன் மாகாணத்தின் போலீசாருக்கு ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்று இருக்கிறது. அதில் போலி தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு தன்னை போலீசார் என கூறியும் வங்கியில் வேலை செய்யும் நபர் என கூறியும் மோசடி இடம்பெற்றுள்ளது.
வங்கியில் வேலை செய்பவராக நடித்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Schaffhausen போலீசார் மேற்கொண்டு இருக்கிறார்கள். தொலைபேசி மோசடி செய்பவர்களுக்கு எதிராக மக்களை அவர்கள் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வீடுகளில் வசிக்கும் வயோதிபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கேட்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாகாணத்தில் உள்ள 84 வயது மூதாட்டிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு விடுத்து தன்னை போலீஸ் அதிகாரியாக சொல்லி நடித்திருக்கிறார். ஒரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ஐந்து கிலோ தங்கத்தை எடுத்து மற்ற நகைகளுடன் சேர்க்க வேண்டும் எனவும் வங்கியில் இருந்து அதை வங்கியிலிருந்து வருபவரிடம் ஏனைய நகைகளையும் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பிட்ட மூதாட்டியை போலீசார் எனச் சொல்லப்படுபவர் வற்புறுத்தி கேட்டதாக சொல்லப்படுகிறது. அவரால் கொடுக்கப்பட்ட தங்கத்தின் உடைய பெருமதி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கு மேல் என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியென சொல்லி குறித்த நபர் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பினை விடுத்து தங்களிடம் இருக்கும் மேலும் 3 கிலோ கிராம் தங்கத்தை திரும்பவும் பங்கில் கொண்டு ஒப்படைக்குமாறு கூறியிருக்கிறார்.
Schaffhausen
இதன் மூலம் சந்தேகமடைந்த அந்த நபர் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். இதனால் உறவினர்கள் ஊடாக Schaffhausen காவல் துறைக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டதும் விடயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பல்வேறு முறைகளில் பண மோசடி இடம் பெற்று வருவதாகவும் இந்த தொடர்பாக மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும் Schaffhausen போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரியாத அழைப்புகள் மூலமாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் உங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் விபத்து சிக்கி இருந்தாலோ அல்லது மரணம் அடைந்துள்ளார் என்ற செய்திகளை கேட்டாலோ அது தொடர்பாக பணம் கேட்டாலோ உடனடியாக சந்தேகப்படுங்கள்.
மேலும் உங்கள் சொத்துக்கள் பற்றிய தகவல்களை தொலைபேசியில் ஒருபோதும் தெரிவிக்காதீர்கள். அதேபோல் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் திருடர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த இடத்தில் உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் இடம் தொடர்பான தூண்டு காகிதம் கிடந்ததாகவும் கூறி உங்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் முயல்வதாகவும் போலீசார் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.