லூசேர்ன் நகரில் நடைபெற உள்ள 2026 பாஸ்நாக்ட் விழா : போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த முழுமையான தகவல்கள்.!
லூசேர்ன் நகரில் நடைபெற உள்ள 2026 பாஸ்நாக்ட் விழாவை முன்னிட்டு, போக்குவரத்து தொடர்பான பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக லூசேர்ன் காவல் துறை அறிவித்துள்ளது.
2026 பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் “ஃபிரிட்ஷி டாக்வாகே” (Fritschi-Tagwache) மற்றும் “உர்க்னால்” (Urknall) நிகழ்வுகளை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணி முதல் காலை சுமார் 6.15 மணி வரை சுவைஸர்ஹோஃப்குவாய் –(Seebrücke) சீப்ரூக்கே – ரயில் நிலைய வளாகம் (Bahnhofplatz) ஆகிய பகுதிகளில் முழுமையான போக்குவரத்து தடை விதிக்கப்படும்.
அதே நாளான பிப்ரவரி 12 (Schmutziger Donnerstag) மற்றும் பிப்ரவரி 16 (Güdismontag) ஆகிய தினங்களில் நடைபெறும் பாஸ்நாக்ட் ஊர்வலங்கள், மதியம் சுமார் 2 மணிக்கு ஹால்டன்ஷ்டிராஸ்ஸே (Haldenstrasse) பகுதியில் இருந்து தொடங்கி, சுவைஸர்ஹோஃப்குவாய்(Schweizerhofqua), சீப்ரூக்கே, ரயில் நிலைய வளாகம், பிலாத்துஸ்ஷ்டிராஸ்ஸே (Pilatusstrasse) , விங்கெல்ரிட்ஷ்டிராஸ்ஸே (Winkelriedstrasse) வழியாக வுன்டெஸ்பிளாட்ஸ் (Bundesplatz) நோக்கிச் செல்லும்.
ஊர்வல முடிவு வால்ட்ஷ்டேட்டர் ஷ்டிராஸ்ஸே (Waldstätterstrasse), காஃப்மான் வேக் மற்றும் ஹெல்வெட்டியாபிளாட்ஸ் (Kauffmannweg / Helvetiaplatz) பகுதிகளில் நடைபெறும். பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் ஊர்வலத்தின் போது, சீப்ரூக்கே (Seebrücke கடப்பதற்கு முன் காப்பல் பிளாட்ஸ் (Kapellplatz) வழியாக ஃபிரிட்ஷிப்ருன்னன் சுற்றி ஒரு சிறப்பு சுற்றுப்பாதை அமைக்கப்படும்.
இரு நாட்களிலும், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள UBS அருகேயுள்ள எஸ்கலேட்டர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக அமர்விட வசதியுடன் கூடிய பார்வையாளர் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கையில், சுவைஸர்ஹோஃப்குவாய் – சீப்ரூக்கே – பிலாத்துஸ்ஷ்டிராஸ்ஸே ஆகிய பிரதான சாலைகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்படும். இந்த நேரத்தில் வாகனங்கள் பாசல் ஷ்டிராஸ்ஸே, கிராய்ட்ஸ்டுட்ஸ், ஸ்பிடால் ஷ்டிராஸ்ஸே வழியாக ஷ்லோஸ்பெர்க் நோக்கி திருப்பி விடப்படும்.
ஊர்வல வாகனங்கள் அணிவகுக்கும் ஹால்டன்ஷ்டிராஸ்ஸே பகுதி தனியார் வாகனங்களுக்கு மதியம் 12.15 மணியிலிருந்தே மூடப்படும். மெகன் (Meggen) மற்றும் குஸ்நாக்ட் (Küssnacht) திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் செலுத்தப்படும். தேவையான அனைத்து போக்குவரத்து மாற்றங்களும் சாலை குறியீடுகள் மூலம் தெளிவாக காட்டப்படும். ரயில் நிலையம் மற்றும் KKL-க்கு செல்லும் வழி Tribschenstrasse – Werkhofstrasse வழியாக எப்போதும் திறந்திருக்கும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள் பிலாத்துஸ்பிளாட்ஸ், வுன்டெஸ்பிளாட்ஸ், ஹால்டன்ஷ்டிராஸ்ஸே, கோத்தார்ட் ஷ்டிராஸ்ஸே மற்றும் ஃப்ரிடென்ஷ்டிராஸ்ஸே ஆகிய திரும்பும் நிலையங்கள் வரை தொடர்ந்து இயங்கும்.
பிப்ரவரி 17 (Güdisdienstag) அன்று நடைபெறும் “மோன்ஸ்டர் கோர்சோ” நிகழ்வின் போது, (Bahnhofstrasse via Seebrücke – Schweizerhofquai – Töpferstrasse – Hertensteinstrasse – Grabenstrasse – Löwengraben) ரயில் நிலைய சாலை வழியாக சீப்ரூக்கே, சுவைஸர்ஹோஃப்குவாய், டொப்ஃபர்ஷ்டிராஸ்ஸே, ஹெர்டன்ஷ்டைன் ஷ்டிராஸ்ஸே, கிராபன் ஷ்டிராஸ்ஸே, லோவெங்கிராபன் வரை ஊர்வலம் நடைபெறும். இந்த நிகழ்வுக்காக, மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை சீப்ரூக்கே – சுவைஸர்ஹோஃப்குவாய் பாதையில் முழு போக்குவரத்து தடை விதிக்கப்படும். இந்த நாட்களில் லூசேர்ன் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்புக்காக “ஆரம்பேண்ட்லி” (Armbändel) எனப்படும் கைப்பட்டைகள் காவல் அதிகாரிகளால் வழங்கப்படும். இவை விழா நடைபெறும் இடங்களிலேயே இலவசமாக பெறலாம். மேலும், பிப்ரவரி 12 மற்றும் 16 தேதிகளில், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள Torbogen பகுதியில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை காவல் துறை சிறப்பு ஸ்டாலில் இந்த கைப்பட்டைகள் வழங்கப்படும். இதன் மூலம் வழி தவறும் குழந்தைகளை உடனடியாக அவர்களது பாதுகாவலர்களுடன் இணைக்க முடியும்.
கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் வெற்றிகரமாக இருந்ததால், அதே நடவடிக்கைகள் 2026 பாஸ்நாக்ட்டிலும் தொடரப்படும் என லூசேர்ன் நகரம், லூசேர்ன் கன்டோன், காவல் துறை, தீயணைப்பு சேவை மற்றும் பாஸ்நாக்ட் அமைப்புகள் இணைந்து தெரிவித்துள்ளன.
லூசேர்ன் கன்டோன் முழுவதும் பாஸ்நாக்ட் வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் சாலை மூடல்கள் அமலாகும். பொதுமக்கள் காவல் துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்களை தவிர்த்து, ரயில், பஸ், கப்பல் மற்றும் இரவு சேவைகள் போன்ற பொது போக்குவரத்துகளை பயன்படுத்துமாறு லூசேர்ன் காவல் துறை வலியுறுத்தியுள்ளது. பாஸ்நாக்ட் நாட்களில் கூடுதல் ரயில்கள், பேருந்துகள் மற்றும் கப்பல்கள் இயக்கப்படும்.
இறுதியாக, லூசேர்ன் காவல் துறை மற்றும் பிற அவசர சேவை அமைப்புகள், பாஸ்நாக்ட் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் “ரூடிக் ஷோனி பாஸ்நாக்ட்” என வாழ்த்து தெரிவித்ததுடன், மிகுந்த கூட்ட நெரிசலிலும் ஒருவருக்கொருவர் பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
மூலம்: லூசேர்ன் காவல் துறை