தமிழரிடம் கைவரிசையை காட்டிய பெண் : லுசேர்ன்னில் நடந்த சம்பவம்.! கன்டோன் லுசேர்ன்னில் தமிழர் ஒருவரிடம் வழிப்பறிக்கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை லுசேர்ன்னில் உள்ள Bundesplz இல் குறித்த வழிப்பறி இடம்பெற்றுள்ளது.
லுசேர்ன்னில் வசிக்கும் தமிழர் ஒருவர் பேருந்தை விட்டு இறங்கி அருகில் உள்ள ஏ.டி.எம் இல் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவரை பின் தொடர்ந்த குறித்த பெண் அவர் ஏ.டி.எம் இல் பணம் எடுத்த அடுத்த நிமிடத்தில் அதனை பறித்துக்கொண்டு தெரியாத திசையில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தும் குறித்த தமிழருக்கு அது பலனழிக்கவில்லை. குறித்த பெண் பின்தொடர்ந்து வருதற்கு முன்னர் தன்னிடம் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து 2 பிராங்குகள் யாசகம் தரும்படி கேட்டதாகவும் குறித்த தமிழர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பின்தொடர்ந்து வந்த நிலையிலையே ஏ.டி.எம் இல் இருந்து எடுத்த தனது 200 பிராங் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், எனினும் இது தொடர்பில் போலீசாரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
படஉதவி :- google map