லுசேர்ன்னில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளை : குற்றவாளி தப்பியோட்டம் கன்டோன் லுசேர்ன்னில் சுர்சேயில் (Valiant Bank in Sursee) உள்ள வேலியண்ட் வங்கி திங்கள்கிழமை காலை கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தின் பின்னர் மர்மநபர் தப்பிச்சென்றுள்ளார். போலீசார் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை 9:30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடந்ததாக லூசர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், சுர்சேயில் உள்ள வேலியண்ட் வங்கிக் கிளைக்குள் முகமூடி அணிந்து ஒருவர் நுழைந்தார். அவர் 175 சென்டிமீட்டர் உயரம், கருப்பு சன்கிளாஸ் மற்றும் நைக் பாதணிகள் அணிந்திருந்தார்.

மர்ம நபர் வங்கி கவுன்டரில் பணம் கேட்டுள்ளார். பின்னர் அவர் பணத்தை பெற்றுக்கொண்டாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை. வங்கி கொள்ளையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வங்கிக் கொள்ளையர் வேலியண்ட் வங்கி (Valiant Bank ) ஊழியர்களை அல்லது வாடிக்கையாளர்களை மிரட்டினாரா? அவர் ஆயுதம் ஏந்தியிருந்தாரா? என்பது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பணம் திருடப்பட்டதா என்றும் அறிக்கையில் கூறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி செயின்ட் ஜார்ஜ் பள்ளி சதுக்கம் வழியாக தப்பிச் சென்றதாகவும் இது தொடர்பான சாட்சியங்களை போலீசார் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(pilatustoday.ch)