உக்ரேன் போர்க்கைதிகளை விடுவிக்க கோரி லூசெர்னில் பேரணி!! நிட்வால்டனில் உக்ரைன் அமைதி மாநாடு இடம்பெற்றி நிலையில், உக்ரேனிய போர்க் கைதிகளை விடுவிக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளக் கோரி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
லூசெர்ன் ரயில் நிலையத்தின் முன்பாக, சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், 200 பேர் வரை பங்கேற்றனர்.
(c) Keystone
போராட்டத்தில் பங்கேற்ற பலர் உக்ரேனிய கொடிகளுடன் காணப்பட்ட அதேவேளை, ‘உக்ரேனிய போர்க் கைதிகளைக் காப்பாற்றுங்கள்’ என்று எழுதப்பட்ட டி-சேர்ட்களையும் அணிந்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் போர்க் கைதிகளுக்காக ஒரு நிமிட அமைதியும் கடைப்பிடிக்கப்பட்டது.