லூசர்ன் கன்டோனில் உள்ள ஒரு பள்ளியில் கழிவறையில் 14 வயது சிறுவன் 12 வயது சிறுமியை வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக 20minuten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பள்ளிக்கூடம் இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும்இ குற்றவாளியை தண்டிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டிசம்பர் 2023 இல் குறித்த சம்பவம் இடம்பெற்ற போதிலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் பெற்றோர் குறிப்பிடுகையில்
தங்களது குழந்தை குறித்த சிறுவனோடு ஐpம்னாஸ்ரீடிக் வகுப்பில் ஒன்றாக படிப்பதாகவும் குறித்த தினம் அவள் கழிப்பறைக்கு சென்றபோது பின்தொடர்ந்து சென்று கதவை மூடிவிட்டு சிறுவன் அவளை மிரட்டி வாய்வழி உறவு வைக்க வற்புறுத்தியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
அவள் எதிர்க்க முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கிறார்கள். மேலும் அந்த சந்தர்ப்பத்தில் சிறுவன் நடந்துகொண்ட விதம் மிருகத்தனமானது எனவும் தங்கள் மகளுக்கு அது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல அருவருப்பாக இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.
அத்தோடு நிறுத்திக்கொள்ளாத சிறுவன் அடுத்த முறை ‘உண்மையாக உடலுறவு கொள்ள’ விரும்புவதாக தெரிவித்ததோடு, அவ்வாறு ‘இல்லையெனில் பலவந்தமாக செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை வீட்டில் சொல்ல தங்களது மகளுக்கு 3 நாட்கள் தேவைப்பட்டதாகவும் கடுமையான மன உளைச்சலுக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குற்றம் இழைத்த சிறுவன் ஆதாரங்கள் இல்லை என்ற தைரியத்தில் தற்போது சுதந்திரமாக உலாவுவதாகவும் பள்ளி நிர்வாகவும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறான சம்பவம் முதல் தடவை அல்ல என்பது அண்மையை செய்திகளில் இருந்து வெளிவரும் உண்மைகளாகவே இருக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், சூரிச்சில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் குறித்தும் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதுமாத்திரமின்றி லூசர்ன் மாகாணத்தில் உள்ள மற்றொரு பள்ளியிலிருந்தும் சமீபத்திய குற்றச்சாட்டுகள் உள்ளன. அங்கு ஒரு சிறுவன் தனது வகுப்பு தோழியை இதே போன்று உறவுக்கு அழைத்துள்ளதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source:- 20min.ch