டிசினோவில் A2 இல் மணிக்கு 205 கிலோமீட்டர் வேகம் சென்றவர் கைது டிசினோ கன்டோன் பெலின்சோனாவுக்கு (Bellinzona) போலீசார் 31 வயதான டிரைவரை அண்மையில் மடக்கிப்பிடித்தனர். அவர் கீ.மீற்றர் வேக வரம்பில் அபாயகரமாக மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் பிடிபட்டார்.
குறித்த நபர் அல்பேனியாவைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் நபர் என தெரியவந்துள்ளது. இரவு 11 மணிக்குப் பிறகு A2 நெடுஞ்சாலையில் Monte Carasso (மான்டே கராசோ) அருகே சென்று கொண்டிருந்த வேளையிலையே ரோந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அவரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு புகாரளித்தனர். மேலும் அவர் சுவிட்சர்லாந்தில் எங்கும் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதீத வேகத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை வலியுறுத்தி திங்கள்கிழமை இந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.