டிசினோவில் 59 வயதான சுவிஸ் பிரஜை ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அன்று 59 வயதான சுவிஸ் குடிமகன் கைது செய்யப்பட்டதாக பொது அமைச்சகமும் கன்டோனல் காவல்துறையும் தெரிவிக்கின்றன.

குடும்ப தகராறில் ஒரு பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காயமடைந்தவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். எனினும் குறித்த பெண்ணுக்கு உயிர் ஆபத்துகள் இல்லை என தெரியவருகின்றது.
விசாரணையை அரசு வழக்கறிஞர் வெரோனிகா லிபாரி மேற்கொண்டுவருகிறார். கைது செய்யப்பட்ட நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.