டிசினோவில் குகைக்குள் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.! டிசினோவின் Blenio (பிளெனியோ) பள்ளத்தாக்கில் காணாமல் போன குகை மூழ்காளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக டிசினோ கன்டோனல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லுசெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சுவிஸ் நபர், 40 மீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு, Brenno (பிரென்னோ) ஆற்றின் மூலத்திற்கு அருகிலுள்ள ஒரு குகைக்குள் நுழைந்தபோது நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவர் மீண்டு வரமுடியாமல் போனது.

விபத்து நடந்த உடனேயே, குகையின் சவாலான சூழ்நிலைகள் காரணமாக மீட்பு முயற்சிகள் பல நாட்கள் ஆகலாம் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சோகமான நிகழ்வு குகை டைவிங்கில் உள்ள ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக இது போன்ற ஆழமான, தொலைதூர பகுதிகளில் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் மலையேறிகள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
©கீஸ்டோன்/எஸ்டிஏ