சென்ட்காலன் மாகாணம் சர்கான்சில் வீதி கட்டுமான பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் கொள்கலன் ஒன்றின் மீது மோதி கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தினை ஏற்படுத்தியவர் 59 வயதுடைய நபர் எனவும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Bildquelle: Kantonspolizei St.Gallen
இருப்பினும் அவரது ஓட்டுனர் உரிமம் சம்பவ இடத்திலையே போலீசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்ட்காலன் மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகம் அவரிடமிருந்து இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரியை எடுக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.