சுவிட்சர்லாந்தில் தனது மைத்துனியை கொலை செய்த இலங்கையர்
சுவிட்சர்லாந்தின் டெசினோ கன்டோனின் சியாஸ்ஸோவில் (Chiasso) தனது மைத்துனி கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 49 வயது நபர் இத்தாலியின் (Bergamo) பெர்கமோவில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதோடு சுவிஸ் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அலுவலகம் அவரை இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு ஒப்படைக்க முறைப்படி கோரியுள்ளது, அங்கு அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும். இந்தத் தகவல் புதன்கிழமை கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இத்தாலிய குடியுரிமை பெற்ற அந்த நபருக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா தெரிவித்துள்ளது. அவரும், அவரது சகோதரரும் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் (Bergamo) பெர்கமோ மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
செப்டம்பர் நடுப்பகுதியில், சுவிஸ் டிசினோ மாகாணத்தில் உள்ள சியாசோ என்ற நகரத்தில், ஆணின் மைத்துனியான பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முன்னதாக அக்டோபரில், டிசினோ பொலிசார் இலங்கையைச் சேர்ந்த அந்த நபரின் 44 வயது சகோதரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். டிசினோ அரசு வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான தொடர் விசாரணைகளின் பின்னர் இரண்டாம் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
மேலும் சந்தேகத்திற்குரிய இருவரையும் நீதிக்கு கொண்டு வர அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதால், இத்தாலியில் இந்த கைது வழக்கில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
©Keystone/SDA