உலகின் வலிமையான நிறுவனங்களில், இரண்டு சுவிஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது! ஐக்கியராச்சியத்தை தளமாகக் கொண்ட பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான BRAND FINANCE இன் புதிய ‘குளோபல் 500 அறிக்கை’, வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான பிராண்டுகளை பட்டியலிடுகிறது .
பல்வேறு நாடுகளில் 6000 பிராண்டுகளை ஆய்வு செய்த குறித்த நிறுவனம், 2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசையில், இரண்டு சுவிஸ் பிராண்டுகள் ‘தொடர்ச்சியான உயர் தரம்’ மற்றும் கவர்ச்சியின் அடிப்படையில் உலகளவில் முதல் 25 பிராண்டுகளுக்குள் இடம்பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரபல்யமான ஆடம்பர வாட்ச் தயாரிப்பாளரான ரோலக்ஸ்இ உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைத்தொடர்பு வழங்குநரான ஸ்விஸ்காம் 15வது இடத்தில் உள்ளது –