சென்ட்காலன் கன்டோன் Rapperswil-Jona பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னதாக, Unterebahnhofstrasse உள்ள ஒரு கடை உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குற்றவாளிகள் முன் கதவு வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர். உள்ளேஇ அறியப்படாத மதிப்புள்ள பல்வேறு மதிப்புமிக்க பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் பிராங்குகளுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.