சுவிஸ் இளம் தலைமுறையினருக்கு நேரம் பார்க்க தெரியாது.! அதிர்ச்சி தகவல் இளம் தலைமுறையினரால் பழைய கடிகாரங்களில் நேரம் பார்க்க முடிவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சிறுவர்களுக்கு கடிகாரத்தில் நேரத்தை பார்ப்பது பாடமாக கற்பிக்கப்பட்டது.
எனினும் தற்காலத்தில் அநேகமான இடங்களில் டிஜிட்டல் கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் அநேகமான சிறுவர்களுக்கு டிஜிட்டல் முறையிலான கடிகாரங்களில் மட்டுமே நேரத்தை பார்க்க தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமே அனலோக் முறையில் ஆன கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை சில இளம் தலைமுறையினருக்கு மாதங்கள் தொடர்பிலான வரிசைக்கிரம முறையும் தெரியவில்லை என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.