சுவிட்சர்லாந்தில் கோழிகள் புதிய வீட்டு செல்லப்பிராணிகளாக உயர்வு
சுவிட்சர்லாந்தில் கோழிகளை வளர்ப்பது தற்போது வீட்டு வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக மாறி வருகிறது. சமீபத்திய தகவல்களின் படி, நாட்டில் சுமார் 70,000 குடும்பங்கள் தற்போது கோழிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றன.
இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், கோழி வளர்ப்பாளர்கள் விற்பனை கடந்த காலத்தை ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். புதிய முட்டைகள் கிடைப்பது முக்கிய காரணமாக இருந்தாலும், தோட்டங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுவது மற்றும் உணவு கழிவுகளை குறைக்கும் வாய்ப்பு போன்ற பலன்களும் மக்களை ஈர்க்கின்றன.

மேலும், கோழிகளை பராமரிப்பது பொருளாதார ரீதியாகவும் சுலபமாக உள்ளது. ஒரு கோழியின் விலை சுமார் 30 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே இருக்கும் நிலையில், கூண்டு அமைப்பும் தீவனச் செலவும் அதிகமாக இல்லாததால், பல குடும்பங்கள் இதை எளிதில் மேற்கொள்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகள் மற்றும் தன்னிறைவு வாழ்க்கை மீது அதிகரித்து வரும் ஆர்வம் காரணமாக, சுவிட்சர்லாந்தில் இத்தகைய சிறிய அளவிலான வீட்டுத் தோட்ட மற்றும் கோழி வளர்ப்பு நடைமுறைகள் மேலும் பரவலாகி வருகின்றன. © WRS