சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? அட இவளவு விசயம் இருக்கா..! 👌 உலகின் மிகவும் தொன்மையான , மக்கள் ஆட்சியை உடைய வரலாற்றினைக் கொண்ட நாடாக சுவிற்சர்லாந்து விளங்குகிறது. 1815 ம் ஆண்டிலிருந்து சுவிஸ் சர்வதேச அளவில் எந்த போரிலும் பங்கெடுத்திருக்கவில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? Facts About Switzerland
👌தனிநபருக்கான வருமானக் கணிப்பீட்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.சுவிற்சர்லாந்து 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசாகும்
👌ஜேர்மன் (டொச் மொழி என்றும் அழைப்பார்கள்), பிரெஞ்சு, இத்தாலி மற்றும் றேத்தோரொமனிஸ் (Rätoromanisch) ஆகிய நான்கு தேசிய மொழிகள் கொண்ட நாடு சுவிஸ்! ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு, 1848 ம் ஆண்டு முதல் கன்ரோன்கள் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? Facts About Switzerland
👌கூட்டாட்சியின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ண் நகரமும் நாட்டின்பொருளாதார மையங்களாக உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும், சூரிச்சும் திகழ்கின்றன.
👌இங்கு ஆறோ அல்லது கடலோ கிடையாது.. அதற்குப் பதிலாக இங்கு நிறைய ஏரிகள்(Lakes) உள்ளன.மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்றது ஜெனீவா ஏரி!நாட்டில் 1484 ஏரிகள் உள்ளன. 24% பிரதேசங்கள் காடுகளால் சூழப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? Facts About Switzerland
👌சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருப்பதால் இங்கு கப்பல் படை இல்லை. இருப்பினும், அண்டை நாடுகளின் எல்லையிலுள்ள ஏரிகளில் ஆயுதம் தாங்கிய இராணுவ ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவிஸ் குடிமக்கள் அயல்நாடுகளின் இராணுவத்தில் சேவை புரியத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, வாடிகனின் சுவிஸ் காவலர்கள் சேவை மட்டும் இதற்கு விதிவிலக்காகும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? Facts About Switzerland
👌குப்பைகள் விடயத்தில், இந்த நாட்டு அரசுடன் நாம் விளையாட முடியாது. குப்பைகளை இனங்கண்டு அவற்றை முதலில் பிரிப்பதோடு, அந்தந்தக் குப்பைகளை பொருத்தமான இடங்களிலேயே கொட்ட வேண்டும் என்பது இங்குள்ள கட்டாயச் சட்டம். நாம் கழிக்கும் குப்பையை அதற்குரிய பையில் இட்டு, அவசியப்படும் முத்திரை ஒட்டப்பட்ட, பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும். அதாவது குப்பை அள்ளுவதற்கும் இங்கே பணம் அறவிடப்படும். நகராட்சி சபைகள் இதற்குப் பொறுப்பானவை. இதில் நீங்கள் பிடிபட்டால், தண்டம் பெரிதாக இருக்கும். வெளிநாட்டவர் ஒருவரின் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்…