சொலுத்தூர்ன் கன்டோன் ஓல்ட்டனில் மரத்துடன் மோதிய கார் இன்று அதிகாலை ஓல்ட்டன் நகரில் ஏற்பட்ட விபத்தில் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை, நவம்பர் 1, 2023 அன்று, அதிகாலை 3:45 மணியளவில், 18 வயது இளைஞன் ஒரு பச்சை நிற BMW X6 காரை Olten இல் உள்ள Aarauerstrasse இல் டுல்லிகன் நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மரம் ஒன்றில் மோதுண்டு விபத்தினை சந்தித்துள்ளார்.
இதன்போது கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் ஓட்டுனர் காரில் இருந்து வெளியேறியுள்ளார். அதனை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கன்டோனல் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.