ஐரோப்பாவிலேயே போக்குவரத்தில் மிகச் சிறந்த நாடு சுவிட்சர்லாந்து என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அடைந்த போக்குவரத்து கட்டமைப்பு கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து முன்னணி வகிக்கின்றது. சர்வதேச சாரதிகள் ஒன்றியத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எத்தனை பேருக்கு ஒர் காணப்படுகின்றது, பாதையின் தரம், எரிபொருள் விலைகள், வீதி வசதிகள் உள்ளிட்ட சில காரணிகளை கருத்திற் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

33 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், ஒரு லட்சம் குடியிருப்பாளர்களுக்கு வீதி விபத்துக்களின் மூலம் இறப்புக்களின் எண்ணிக்கை 1.71 என தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரம் பேருக்கு 604 கார்கள் காணப்படுவதாகவும் வீதிகள், பாதைகள் சிறந்த தரத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் போக்குவரத்து நெரிசல் நிலை ஒப்பீட்டளவில் குறைவு என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தர வரிசையில் சுவிட்சர்லாந்துக்கு அடுத்த நிலைகளில் நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டு முதல் ஐந்தாம் இடம் வரையில் முறையே வகிக்கின்றன.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.