உலகின் அதி கூடிய மணித்தியால சம்பளம் வழங்கப்படும் இடமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா.? சுவிட்சர்லாந்தின் வாட் கான்டனில் சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா, நியூசெட்டல், ஜூரா, ரிக்கினோ, பேசல் சிட்டி உள்ளிட்ட கான்டன்களில் மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட் கான்டனிலும் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இடதுசாரி தரப்புக்களும், தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

மணித்தியாலம் ஒன்றுக்கான குறைந்தபட்ச சம்பளம் 23 சுவிஸ் பிராங்குகளாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு பொது வாக்கெடுப்பு நடாத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மணித்தியால சம்பளம் நிர்ணயிக்கப்பட்டால் அது ஜெனீவா கான்டனுக்கு நிகரான தொகையாக அமையப் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் அதி கூடிய மணித்தியால சம்பளம் வழங்கப்படும் இடமாக ஜெனீவா பொதுவாக அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.