சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி: குளிர்கால வேடிக்கை – சுவிஸ் தமிழர்களுக்கு ஏற்ற சிறப்பு அனுபவங்கள்
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் முதலாம் தலைமுறையினருக்கு குளிர்காலம் வெயில் காலம் எல்லாமே ஒன்றுதான்.. ஏனென்றால் குளிர் வெயில் என எந்தக்காலம் வந்தாலும் அவர்களுக்கு இருந்த ஒரே குறிக்கோள் வேலை.. வேலை.. வேலை மட்டும்தான். ஒன்றுக்கு இரண்டு வேலைகள் என ஓடி ஓடி உழைத்த சமூகம் அது. சுவிட்சர்லாந்து சமூகத்துடனும் அவர்களின் கலாசார விழாக்களிலும் அப்போது வந்த தமிழர்கள் அவ்வளவாக பின்னிப்பிணைந்திருக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் இன்று சுவிசில் வசிக்கும் இளம் சமூகத்தினர் அதாவது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் நன்றாகவே இங்குள்ள சுவிஸ் சமூகத்தினரின் கலாசார நிகழ்வுகள் மற்றும் மக்களோடு நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கிறார்கள்: சுருக்கமாக சொல்லப்போனால் அப்போதைய எம்மவர்கள் பலர் HARD WORK செய்வதை நோக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய தமிழ் சமூகம் SMART WORK செய்துகொண்டிருக்கிறார்கள். சரி இனி விசயத்துக்கு வருவோம். சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு பருவங்களிலம் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படியான நிகழ்வுகளை உங்களில் எத்தனை பேர் நேரில் சென்று பார்த்த தங்கள் நேரங்களை செலவிட்டிருக்கிறீர்கள்…
சரி சுவிசில் இடம்பெறும் விழாக்கள் பற்றி எம்மவர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகவும் அவ்வாறான விழாக்களை சென்று பார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்காகவுமே இந்த வீடியோ… இது சுவிசில் வருடம் ழுழுக்க இடம்பெறும் விழாக்கள் தொடர்பான வீடியோ அல்ல. எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் இடம்பெறும் விழாக்கள் தொடர்பானதே… வாங்க விழாக்களுக்குள் போகலாம்.

ஆல்ப்ஸ் மலைகளின் அழகு, பனி சூழ்ந்த இடங்கள், விளையாட்டுகள், கலாச்சார விழாக்கள் என பிப்ரவரி மாதம் ஏராளமான நிகழ்வுகளை கொண்டாடுகிறது. சூரிச், ஜெனீவா, பாசல் போன்ற நகரங்களில் வசிக்கும் சுவிஸ் தமிழர்கள் இந்த நிகழ்வுகளை எளிதாக அனுபவிக்கலாம். குழந்தைகளுடன் ஸ்லெடிங் செல்வது, கார்னிவல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது போன்றவை இளம் தமிழ் குடும்பங்களுக்கு பிடித்தமானவை. இவை ஐரோப்பிய குளிர்காலத்தை முழுமையாக உணர உதவும்.
லௌசானில் பிப்ரவரி 1 முதல் 8 வரை நடக்கும் Prix de Lausanne, உலக அளவில் பிரபலமான இளம் பாலே நடன போட்டி. 15-18 வயது நடனக் கலைஞர்கள் கிளாசிக் மற்றும் நவீன பாலே நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். (Théâtre de Beaulieu in Lausanne) தியேட்டர் டி பியூலியு மேடையில் நடக்கும் இதை பார்க்க டிக்கெட் வாங்கலாம். கலை ஆர்வமுள்ள தமிழர்களுக்கு இது ஒரு அற்புதமான அனுபவம்.
ஜெனீவாவில் பிப்ரவரி 5 முதல் 28 வரை ஆன்டிஜெல் இசை விழா நடக்கும் (Antigel music festival Geneva). கலை, விளையாட்டு, சமூக நிகழ்வுகள் இணைந்த இந்த விழா தொழிற்பயிற்சி மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்பாடாகிறது. ஜெனீவாவில் அதிக தமிழர்கள் வசிப்பதால் இது அருகில் உள்ள வேடிக்கை. நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மறக்காமல் ஒரு தடவை போய் பாருங்க.
பெல்லின்சோனாவின் ரபடான் கார்னிவல் (Rabadan Carnival, Bellinzona) பிப்ரவரி 12 முதல் 17 வரை நடக்கும். (King Rabadan) ரபடான் ராஜாவின் கற்பனை உலகில் அணிவகுப்புகள், இசை, கயிறு இழுத்தல், ரிசோட்டோ மற்றும் லுகானிகா சாசேஜ்கள் இலவசமாக வழங்கப்படும். டிசினோ பகுதியின் உற்சாகமான கொண்டாட்டம் இது.
இதே போன்று மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன….
லா பிரெவினில் பிப்ரவரி 7-8 ஆம் தேதி COLD ஃபெஸ்டிவல். சுவிட்சர்லாந்தின் குளிர்ச்சியான இடத்தில் பொழுதுபோக்கு, போட்டிகள், பட்டாசு, சூடான உணவுகள் என நிகழ்வு களைகட்டும்.
லாய்க்கர்பாட்டில் பிப்ரவரி 6 மற்றும் 20 ஆம் தேதிகளில் வின்டர் ஆக்ட்ஸ் – டிஜே மற்றும் நேரடி இசை.
செயின்ட் மொரிட்சில் பிப்ரவரி 8, 15, 22 ஆம் தேதிகளில் வைட் டர்ஃப் குதிரைப் போட்டிகள். உறைந்த ஏரியில் அதிவேக கேலப், டிராட்டிங் மற்றும் ஸ்கிக்ஜோரிங் என்பன இடம்பெறும்.
பாசல் ஃபாஸ்னாக்ட் பிப்ரவரி 23 முதல் 25 வரை – சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கார்னிவல். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மூன்று நாட்கள் உற்சாகம். யுனெஸ்கோ பாரம்பரியம். முகமூடிகள், அணிவகுப்புகள், இசை என தமிழ் குடும்பங்களுக்கும் இது மிகச்சிறந்த ஒரு அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
சூரிச்சில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை Art on Ice. உலக சிறந்த ஃபிகர் ஸ்கேட்டர்கள் (figure skaters) மற்றும் இசை நட்சத்திரங்கள் இணைந்த ஐஸ் ஷோ. சூரிச் தமிழர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்
குளிர்கால விளையாட்டுகளில் டோபோகனிங் (tobogganing) மற்றும் ஸ்லெடிங் மிகவும் பிரபலம். சுவிட்சர்லாந்து முழுவதும் பல பாதைகள் உள்ளன. குறிப்பாக கிரிண்டெல்வால்டின் 11 கிலோமீட்டர் நீண்ட பாதை – ஐகர், மான்ச், ஜங்ஃப்ரா மலைகளுக்கு முன்பாக ஸ்லெடிங் செய்வது அற்புத அனுபவம். சூரிச்சில் இருந்து ரயிலில் எளிதாக செல்லலாம். குழந்தைகளுடன் செல்ல ஏற்றது, பனியில் வேகமாக இறங்குவது உற்சாகம் தரும். பல தமிழ் குடும்பங்கள் வார இறுதியில் இதை செய்து மகிழ்கின்றனர்.
சுவிஸ் தமிழர்களுக்கு பிப்ரவரி இன்னும் சிறப்பு – சூரிச்சில் பிப்ரவரி 21 அன்று விசர் கதை என்ற நேரடி தமிழ் காமெடி ஷோ நடக்கும். பிப்ரவரி 28 அன்று We’ll Make You Sweat என்ற தமிழ் க்ளப் நைட். இவை உள்ளூர் தமிழ் சமூகத்தை இணைக்கும் வேடிக்கையான நிகழ்வுகள். குளிர்காலத்தில் வீட்டுக்குள் அடைந்திருக்காமல், இந்த ஐரோப்பிய மற்றும் தமிழ் கொண்டாட்டங்களை அனுபவியுங்கள். சுவிட்சர்லாந்தின் குளிரை வெல்ல சிறந்த வழி இது! இந்த சூடான தகவலை SHare பண்ணாம போயிடாதீங்க..