உலகின் ‘மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடு’ என சுவிட்சர்லாந்து முதலிடம்
சுவிட்சர்லாந்து உலகின் மிக போட்டித் திறன் வாய்ந்த நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வட ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிடம் இந்த விருதை இழந்திருந்த சுவிட்சர்லாந்து, இப்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
லௌசானிலுள்ள IMD (International Institute for Management Development) Bussiness பள்ளி வெளியிட்ட 2025 உலக போட்டித் திறன் தரவரிசை அறிக்கையின்படி, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கை பின்னுக்குத்தள்ளி சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவரிசை உலகளவில் 67 நாடுகளின் பொருளாதார நிலைமைகள் மற்றும் வளர்ச்சி சாத்தியங்களை ஒப்பிட்டு தயாரிக்கப்படுகிறது. 170 சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய குறிப்புகள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட உலகம் முழுவதும் உள்ள வணிக தலைவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஆகியவை இந்த தரவரிசையின் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டன.

சுவிட்சர்லாந்து இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்ததற்கான முக்கிய காரணிகள் என்றால், அதன் நிலையான அரசியல் அமைப்புகள், திறமையான நிர்வாகம் மற்றும் சிறந்த தரம் வாய்ந்த அடித்தள வசதிகள் என்பவையாகும். இவை அனைத்தும் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும், பன்னாட்டுத் தொடர்புகளுக்கும் வலுவூட்டும் பணியை செய்து வருகின்றன.
அதே நேரத்தில், அரசியல் மதிப்பீடுகளில் உள்நாட்டு முரண்பாடுகள் மற்றும் அரசியல் நிலைமை மந்தமாக இருப்பது சில நாடுகளுக்குத் தரம்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு இடங்கள் பின்னடைந்து, இந்த ஆண்டில் 13வது இடத்தில் உள்ளது.
சுவிட்சர்லாந்தின் முதலிடம் உலகளவில் அதனுடைய வணிக சூழல் மற்றும் நிர்வாக திறனை மறு உறுதி செய்கிறது. இது அவ்வளவு நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.