சுவிஸில் Jumbo பெயரில் மோசடி : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் (Jumbo) ஜம்போ வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ஒரு புதிய ஃபிஷிங் மோசடி இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் போனஸ் திட்டத்தில் 8,700 புள்ளிகளைச் சேகரித்ததற்காக வெகுமதியாக “மகிதா CoolBox” என்ற போலிச் சலுகையை வழங்கியுள்ளது.
மோசடியான மின்னஞ்சல் புதிய பரிசுகளோடு மேலும் பொருட்களை கொள்வனவு செய்ய 95% வரை தள்ளுபடிகளை வழங்குவதாக தெரிவிக்கிறது. ஆனால் இது ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத்தகவல் உண்மை என நம்பவைக்க (JUMBO) ஜம்போ லோகோவை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் போலி இணையதளத்திற்கான இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலைப் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

அதை நீங்கள் கிளிக் செய்தால் அந்த போலி இணைத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அங்கே ஒரு கணக்கெடுப்பை முடித்த பிறகு, பயனர்கள் தனிப்பட்ட தகவலை வழங்குமாறும், ஷிப்பிங்கிற்காக ஒரு சிறிய கட்டணத்தை அதாவது கிட்டத்தட்ட 2 பிராங் அளவிலான கட்டணத்தை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிறிய கட்டணம் தானே என பலர் பணம் செலுத்தும்போது அங்கு மிகப்பெரிய தொலை அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாக்குறுதி அளித்த எந்த பரிசு பொருளும் உங்களுக்கு கிடைக்காது.
எனவே இதுபோன்ற மின்னஞ்சல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை நாடும்படியும் சுவிட்சர்லாந்தில் பைசர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
Quelle: cybercrimepolice.ch
Titelbild: Symbolbild