புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் வெளியான புதிய தரவு சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்த மக்கள் எவ்வாறான நிலமைகளை கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பாக புதிய தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் மக்கள்தொகை மற்றும் இடம்பெயர்வுப் பிரிவு, பல்வேறு காரணிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில், புலம்பெயர்ந்த பின்னணியில் உள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் எவ்வளவு நன்றாக வாழ்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தது .

இது தொடர்பாக கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, பொதுவாக புலம்பெயர்ந்தோர் சுவிட்சர்லாந்து மக்களை விட ‘மோசமான வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலைமைகளை’ கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் நிதி அடிப்படையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ‘எந்தச் சூழ்நிலையிலும் பல்வேறு மக்கள்தொகை குழுக்களிடையே காணப்படும் வேறுபாடுகளுக்கு இடம்பெயர்வு நிலையை மட்டுமே விளக்கக் காரணியாகக் கருத முடியாது’ என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது வயது, தேசியம் மற்றும் கல்வி போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் வேறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.