ஜெனிவா விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலரின் வேலைநிறுத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் கீஸ்டோன் எஸ் டி ஏவிடம் உறுதிப்படுத்தியபடி, வேலைநிறுத்தம் செய்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, மதியம் மீண்டும் வேலையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. எட்டு மணி நேரம் நீடித்த இந்த வேலைநிறுத்தம் காரணமாக விமானசேவை நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை சில தனிப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்துடன் காலதாமங்களும் ஏற்பட்டன. சில பயணிகள் தங்கள் பொதிகள் இல்லாமல் புறப்படவேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நிலமை வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.