சுவிஸில் 206 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு மீட்பு
சுவிட்சர்லாந்தின் பிரிக் (Frick) ரயில் நிலையத்துக்கு பின் உள்ள குருஹால்டே (Gruhalde) பகுதியில், பழைய உயிரின ஆராய்ச்சியாளர்கள் ஒரு முற்றிலும் புதிய வகை டைனோசரின் எலும்புக்கூறுகளை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு கடந்த வாரம் வெளியான Swiss Journal of Palaeontology இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் எலும்புக்கூடுகள் கிட்டத்தட்ட 206 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை மதிப்பீடு செய்துள்ளனர்.

புதிய வகை இந்த டைனோசர், “சௌரோபோடோமார்ப்ஸ்” (Sauropodomorphs) எனப்படும் நீண்ட கழுத்து கொண்ட தோற்றமுடைய டைனோசர் குழுவைச் சேர்ந்தது. இந்த பாதி முழுமையான எலும்புக்கூறு 2013-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என Sci News அறிவித்துள்ளது.
இந்த எலும்புக்கூடுகளடன் தொடர்புடைய பகுதிகள் பெரும்பாலும் முழுமையடையவே உள்ளன. இதற்கு முந்தைய காலங்களில், டிரையாசிக் (Triassic) காலத்திய பிளேட்டியோசோரஸ் (Plateosaurus) இன டைனோசர்களின் எலும்புகள் இக்களத்தில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.