சூரிச்சில் 299,000 பிராங்குகளுக்கு ஏலம் போன “ZH 24″இலக்கத்தகடு சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் வாகன இலக்கத்தகடு ஒன்று 299,000 பிராங்குகளுக்கு ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
இதுவரை ஏலம் விடப்பட்ட அதிகூடிய விலையுள்ள இலக்கத்தகடு என்ற புதிய இடத்தை “ZH 24′ என்ற இந்த இலக்கத்தகடு பிடித்துள்ளது. இதற்கு முன்னர் சுக் (Zug) மாகாணத்தில் “ZG 10” என்ற இலக்கத்தகடே அதிகூடிய விலைக்கு ஏலம் விடப்பட்டதாக காணப்பட்டது. இது கடந்த 2018 இல் 233,000 பிராங்குகளுக்கு ஏலம் விடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னரும் இவ்வாறு தனித்துவமான இலக்கத்தகடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கின்றன. சூரிச் மாகாணத்தில், ‘ZH 100’ என்பது ஒரு கார் உரிமையாளருக்கு மிகவும் மதிப்புமிக்க உரிமத் தகடு ஆகும்.

அவ்விலக்கம் 2022 இல் 226,000 பிராங்குகளுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. ‘ZH 50’ என்ற இலக்கத்தகடு ஆகஸ்ட் 2023 இல் 202,000 பிராங்குகளுக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது “ZH 24 என்ற இலக்கத்தகடு அதிகூடிய விலைக்கு ஏலம் போயுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஏலத்தில் விட்டவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.