சுவிஸ் முதியவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் : புதிய ஆய்வு தகவல்
ஓய்வுக்குப் பிறகும் மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் வாழும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 26 அன்று வெளியான இந்த ஆய்வு, Swiss Life காப்பீட்டு நிறுவனத்துக்காக YouGov நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80% சுவிஸ் முதியவர்கள் வாழ்க்கையால் திருப்தி
இந்த ஆய்வில், 65 முதல் 80 வயதுக்குட்பட்ட சுவிசில் வாழும் முதியவர்களிடம் கேள்விகள் விடுக்கப்பட்டன. இதில் பங்கேற்ற 2,063 பேர் வழக்கமான ஓய்வுபெற்றவர்கள். இவர்களில் 80 சதவீதம் பேர், தங்களின் தற்போதைய வாழ்க்கைத் தரம் குறித்து “மிகவும் திருப்திகரமானது” என்று பதிலளித்துள்ளனர்.
இந்த தகவல், சுவிட்சர்லாந்தில் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற பிறகும் நல்ல நலநிலை, போதிய வருமானம், மற்றும் சமூக உறவுகள் ஆகியவற்றுடன் ஒரு புகழ்மிக்க ஓய்வூதிய வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

முதியவர்கள் மகிழ்வின் முக்கிய காரணிகள்
ஆய்வில், முதியவர்கள் தங்களது மகிழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக பின்வரும் அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர்:
- ஓய்வுநேர பொழுதுபோக்குகள் – புத்தக வாசிப்பு, தோட்டம் வேலை, தொலைக்காட்சி, இசை, சினிமா போன்றவை
- சமூக உறவுகள் – குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சமூகக் குழுக்களுடன் தொடர்பு
- உடல்நலம் மற்றும் சுதந்திரம் – தனியாக இயங்கும் திறன், சுயநிர்ணய வாழ்வு
- பயணங்கள் மற்றும் சுற்றுலா – மற்ற நாடுகளுக்கு அல்லது நாட்டினுள் பயணித்தல்
- நிதி நிலைமை – பாதுகாப்பான வருமானம், ஓய்வூதியம், கட்டுப்பாடான செலவுகள்
மேலும், பலர் “தனிமை” என்பது ஓய்வுபெற்ற வாழ்க்கையின் ஒரு எதிர்பார்க்கப்படும் பிரச்சனை என்றாலும், சுவிட்சர்லாந்தில் அது பெரிய அளவில் காணப்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூதவர்கள் பலரும் சமூக உறவுகளில் நன்கு இணையப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
எதிர்கால நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்
அதிகமான மூதவர்கள், தங்களது எதிர்காலம் குறித்துப் பெரிதும் பயப்படவில்லை என்றும், அரசு மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் என நம்புகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.