சுவிட்சர்லாந்தில் ஹைகிங் (Hiking) விபத்துகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற சுமார் 40,000 விபத்துக்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தடுப்பு பணியகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 53 பேர் இவ்வாறான விபத்துக்களால் இறப்பதாக அறிவித்துள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இவ் விபத்துக்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் அனுபவமில்லாதவர்கள் மற்றும் மலைகளின் ஆபத்துகளைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் இவ்வாறான விபத்துக்களில் சிக்குவதாகவும் விபத்து தடுப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான உயிர்களைக் கொல்லும் கோடைக்கால நடவடிக்கைகளில் ஹைகிங் மட்டுமல்ல. மாறாக நீச்சல் நடவடிக்கையின் போதும் பல இறப்புகள் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.