சுவிட்சர்லாந்தில் பலரை குழப்பிய புதிய பாட்டில் மூடிகள்.! கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்து சுவிட்சர்லாந்தில் வரும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளில் ஒரு மாற்றத்தை நீங்கள் அவதானித்திருக்க முடியும். மினரல் வாட்டர் மற்றும் ஒரு சில குளிர்பாணங்களில் இந்த மூடிகள் கழன்று விழாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்து குழப்பமடைந்திருப்பீர்கள்.
உண்மையில் போத்தல் வடிவமைப்பில் ஏதும் தவறா என நம்மில் பலர் நினைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கடுப்பாகி போத்தல் மூடிகளை கழட்டியும் எறிந்திருப்பார்கள். பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகள் இவ்வாறு மாற்றமடைவதற்கு சுவிட்சர்லாந்தில் என்னதான் நடந்தது.? எதற்கு இந்த மாற்றம் என்பது பற்றிய முழுமையான தகவல்களை அறிய இந்த பதிவை கடைசி வரை பாருங்கள்.
ஜூலை 3 முதல் ஐரோப்பிய ஓன்றியத்தின் புதிய ஒழுங்கு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒழுங்குமுறை PET பாட்டில்கள், பாட்டிலுடன் உறுதியாக இணைக்கப்பட்ட மூடிகளை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மூடிகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் இது இது தடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் இது பற்றிய பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய நாடுகளில் அங்கம் வகிக்காத நாடாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பானங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்த புதிய மூடிகளுடன் கூடிய பல பாட்டில்கள் சுவிட்சர்லாந்திலும் புழக்கத்தில் உள்ளன. சிலர் இந்த யோசனையை விரும்புகிறார்கள், ஏனெனில் இது சுற்றுச்சூழல் நட்ழலுக்கு நட்பான ஒரு விடயமாக பார்க்கிறார்கள். மற்றவர்கள் இதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஏனெனில் மூடியை திறந்து குடிக்கும் போது அசௌகரியங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பாக சுவிஸ் பான உற்பத்தியாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ரிவெல்லா (Reivella) மற்றும் கோகோ கோலா (Co-Co Cola) போன்ற பிராண்டுகள் பழைய, தளர்வான மூடிகளையே விரும்புகின்றன. சுவிஸ் மறுசுழற்சி முறை நன்றாகவே வேலை செய்கிறது , எந்த மாற்றங்களும் தேவையில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். Knutwiler மற்றும் Vivi Kola போன்ற பிற உற்பத்தியாளர்கள் ஏற்கனவே புதிய ஐரோப்பிய ஓன்றியத்தின் புதிய ஒழுங்கு முறை க்கேற்ப மூடிகளை மாற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இந்த மாற்றம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பிரபல சில்லறை விற்பனை அங்காடிகளின் நிலமைகளை பொறுத்தமட்டில் மிக்ரோஸ், கூப் போன்ற பெரிய பல்பொருள் அங்காடிகளும் மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பழைய மூடிகள் விரைவில் உற்பத்தி செய்யப்படாது என Migros நிறுவனத்திற்கு அதன் சப்ளையர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து Migros இந்த மாற்றங்களை பின்பற்ற தொடங்கியுள்ளது.
ஆனால் சில வாடிக்கையாளர்கள் புதிய மூடிகள் நடைமுறைக்கு மாறானதாக கருதுகின்றனர். Coop புதிய மூடிகளுடன் சில தயாரிப்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் சொந்த பிராண்டுகளில் பெரும்பாலானவை பாரம்பரிய மூடி அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
சுவிட்சர்லாந்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான போத்தல்களிலும் பயன்படுத்தப்படுமா என்பது இன்னும் ஒரு விவாதப்பொருளாகவே இருக்கின்றது. எனவே இது தொடர்பில் எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்… உங்களில் எத்தனை பேர் இந்த புதிய மூடிகளால் எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்பதை காமண்டில் மறக்காமல் தெரிவிக்கவும் நன்றி.
Source