சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில், பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் 104,518 பேர் வேலையில்லாமல் பதிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை மே மாதத்தை விட 947 குறைவாகும். ஆனால் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 20,000 பேர் அதிகமாகும். ஜூன் 2023 இல் வேலையின்மை விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக இருந்தது. ஆனால் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 2.3 சதவீதமாக காணப்படுகிறது.
மேலும் இவ்வாண்டு, 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதமானது ஜூன் மாதத்தில் 8,948 பேராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 50-64 க்கு இடைப்பட்ட வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 321 ஆக குறைந்து 29,565 ஆக காணப்படுகிறது.

ஜூன் மாதத்தில், சுவிட்சர்லாந்தில் குறைவான மக்கள் வேலைவாய்ப்பு மையங்களில் வேலை தேடுகின்றனர். மொத்தம் 174,964 வேலை தேடுபவர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1,458 குறைவு என்பதும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 24,346 பேர் அதிகரித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.