சுவிட்சர்லாந்தில் கூகுள் மேப் மூலம் அதிகம் தேடப்பட்ட இடம் எது தெரியுமா.?
சுவிட்சர்லாந்தில் கூகுள் மேப் மூலம் அதிக அளவு தேடப்பட்ட இடம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு அதிக அளவு தேடப்படும் இடங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்படுவது வழமையானதாகும்.
கூகுல் மேப்ஸ் தனது இருபதாவது ஆண்டை பூர்த்தி செய்கின்ற நிலையில் சுவிட்சர்லாந்தில் அதிக அளவு தேடப்பட்ட இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆரே ஜார்ஜ் (Aare Gorge) முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்தபடியாக Trummelbach வீழ்ச்சி (Trummelbach Falls) , Jungfrauoch ஆகிய இடங்கள் தேடப்பட்டுள்ளன.
இவை அனைத்துமே Bernese Oberland பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.