சுவிட்சர்லாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் செவ்வாயன்று அறிவித்தபடி, 2022 ஆம் ஆண்டு முதல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் இன்னும் புகைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து புகைப்பிடிப்பவர்களின் விகிதம் 3 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது.

புதிய வகையான புகையிலை பொருட்கள் அல்லது இ-சிகரெட்டுகள் இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளமை இந்த குறைவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2022 முதல் 15 முதல் 24 வயதுடையவர்களில் 17 சதவீதம் பேர் அவற்றை நுகர்ந்துள்ளதாகவும் குறித்த கணெக்கெடுப்பில் தெரிவிக்கப்படுகிறது.
BFS இன் அறிக்கையின் படி , அதிகமாக புகைபிடிப்பவர்களின் விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.