சுவிட்சர்லாந்தில் இப்படியும் சுரங்கங்கள் இருக்கிறதா..? ஆச்சரிய தகவல்கள்.! அட்வென்சர் ட்ரிப் செல்பவரா நீங்கள்? பூமிக்கு மேலே, ஆகாயத்தில் பறந்து சென்று, டிரெக்கிங் என தேடி தேடிச் சென்று உங்கள் டிராவல் பக்கெட் லிஸ்ட்டை நிறப்புபவராக இருந்தால், உங்கள் சாகச பயணத்தின் பட்டியலில், இந்த இடங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு முறை பூமிக்கு அடியில் சுற்றுலா சென்று பாருங்கள். என்ன பூமிக்கு அடியில் சுற்றுலாவா? என நீங்கள் கேட்பது தெரிகிறது.
நான் சொல்லிக்கொண்டிருப்பது சுரங்கங்கள் குறித்து. உலகளவில், கட்டிடக்கலையின் அற்புதமாக, மனித மூளையின் உச்சமும், இயற்கையின் பிரம்மண்டமும் கைக்கோர்த்து பார்ப்பவரை அதிசயிக்க வைக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றினுள் சென்று வருவது நமக்கு புதுவித அனுவங்களை கொடுக்கும். உலகெங்கிலும் இருக்கும் பிரம்மாண்டமான, மிக நீளமான சுரங்கப்பாதைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
செய்கென் சுரங்கம், ஜப்பான்
இது கடலுக்கு அடியில் நம்மைக் கூட்டிச் செல்லும் சுரங்கம். இரட்டை கேஜ் ரயில் சுரங்கப்பாதையான செய்கென், உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம். 53.85 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இந்த சுரங்கம் ஜப்பானின் ஹான்சு மற்றும் ஹொக்கைடோ தீவுகளை இணைக்கிறது.
இதனை ஜப்பானின் கட்டிடக்கலையின் அற்புதம் என்று மெச்சுகின்றனர்.
காட்ஹார்ட் பேஸ் சுரங்கம், சுவிட்சர்லந்து
இது உலகின் மிக நீண்ட ரயில் சுரங்கம். இது 57.06 கிலோமீட்டர் தூரம் நீளும் இந்த காட்ஹார்ட், சுவிஸ் ஆல்ப்ஸ் வழியாக சென்று எர்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் போடியோவை இணைக்கிறது.
சேனல் சுரங்கம், யுனைட்டட் கிங்க்டம் – பிரான்ஸ்
சன்னல் என்றழைக்கப்படும் இந்த சேனல் சுரங்கம் யுனைட்டட் கிங்டமில் உள்ள ஃபோக்ஸ்டோன் மற்றும் பிரான்ஸில் உள்ள காக்கில்லஸ் என்ற இடங்களை இணைக்கிறது
50.45 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இதுவும் நீருக்கடியில் செல்லும் சுரங்கப்பாதையாகும்.
லாட்சஸ்பெர்க் பேஸ் சுரங்கம், சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மற்றுமொரு அற்புதம் இந்த லாட்சஸ்பெர்க் பேஸ் சுரங்கம். 34.57 கிமீ தூரம் இது நீள்கிறது மேலும், ஃப்ரூட்டிகன் மற்றும் ராரோன் என்கிற இடங்களை இணைக்கும் இந்த வழித்தடம் மிகவும் சவாலான பாதையாகும்
நியூ குவாஞ்சியா சுரங்கம், சீனா
சீனாவின் கிங்காய் திபெத் ரயில் பாதையில் அமைந்திருக்கும் குவாஞ்சியா மலையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சுரங்கப்பாதை. இரட்டை வழித்தடம் கொண்ட இந்த ரயில் சுரங்கமானது வழிநெடுக இயற்கையின் எழில் கொஞ்சும் அழகால் சூழ்ந்துள்ளது.