சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பை விட வீடு வாங்குவது இப்போது மலிவானது என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்விஸ் சொத்து சந்தையில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடக்கிறது. இது உண்ஐமயில் வீடுகளை வாங்குபவர்களை குழப்பக்கூடும். 2024 முதல் ஆறு மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் தனி வீடுகளின் விலை குறைந்துள்ளது.
Moneypark ரியல் எஸ்டேட் செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முந்தைய அரையாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒற்றை வீட்டு விலைகள் 2.2 சதவீதம் குறைந்துள்ளன.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில் வீட்டு விலைகள் 4 சதவீதம் குறைந்துள்ளது. பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் பகுதிகளில் இந்த குறைப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
மறுபுறம், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 0.5 சதவிகிதம் அதிகமாகும். நாட்டின் ஜெர்மன் மொழி பேசும் பகுதியில் சற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வகையான சொத்துக்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடுகளுக்கான காரணத்தை அந்த அறிக்கை விளக்கவில்லை- அதாவது, தற்போது ஒற்றை குடும்ப வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் ஏன் விலை அதிகம் என்பது தொடர்பான விளக்கங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.