சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தசாப்தங்களில் பதிவாகிய மிகக் குறைந்த வேலையற்றோர் வீதம் தற்பொழுது பதிவாகியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான ஆக குறைந்த வேலையற்றோர் வீதம் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளது.
சராசரியாக வேலையற்றோர் வீதம் இரண்டு வீதமாக காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு இந்த வேலையற்றோர் எண்ணிக்கை 1.7 ஆக காணப்பட்டது.
பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அனைத்து பிராந்தியங்களிலும் வேலையற்றோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் மாணவர்களை பார்த்து காப்பி அடித்த சுவிஸ் பேராசிரியர்.!!
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பு பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்று அச்சுறுத்தல் நீங்கியதை தொடர்ந்து வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.