சுவிட்சர்லாந்தில் மாணவர்களை பார்த்து காப்பி அடித்த சுவிஸ் பேராசிரியர்.!!
சுவிட்சர்லாந்தில், மாணவர்களை காப்பி அடித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களை காப்பி அடித்த சுவிஸ் பேராசிரியர்
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen பல்கலையில் பேராசிரியராக பணியாற்றிவந்த Wolfgang Stölzle என்பவர், தனது மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தனது என்று கூறி வெளியிட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது.
விசாரணையில், Institute of Supply Chain Management என்னும் கல்வி நிறுவனத்தின் இயக்குநரான Wolfgang, தொடர்ந்து தனது மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தன்னுடைய பெயரில் வெளியிட்டுவந்துள்ளார். அவற்றை ஆய்வு செய்த மாணவர்களின் பெயர்களைக் கூட அவர் குறிப்பிடவில்லை.
புகார்கள் தொடர்பில் விசாரணை துவங்கியதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் Wolfgang பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது, பல விதிகளை Wolfgang கடுமையாக மீறியுள்ளதால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலை அறிவித்துள்ளது.