சுவிட்சர்லாந்தில் தமிழ் பாலியல் போதகர் சிக்கியது எப்படி.? (அதிர்ச்சி காணொளி) குமார் வில்லியம்ஸ் இந்தப்பெயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் தமிழர்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர். தமிழர்கள் தங்கள் இனரீதியாகவும் மதரீதியாகவும் வெட்கப்படவைக்கும் ஒரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே இப்பெயர் உச்சரிக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் இந்த பெயர் சுவிஸ் ஊடகங்களால் பேசுபொருளாக்கப்படுகிறது.
சுவிஸ் ஊடகங்களினால் பொறிவைக்கப்பட்டு சிக்கியுள்ள குமார் வில்லியம்ஸ் பற்றிய திடுக்கிடும், முகம்சுழிக்கவைக்கும் தகவல்களே இவை. இச்செய்தி சுவிட்சர்லாந்தில் இரு பெரும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் தமிழ் வடிவமே.
இச்செய்தி தொடர்பான அனைத்து விடயங்களுக்குமான பொறுப்பு அந்தந்த ஊடகங்களை சாரும் என்பதோடு எமது ஊடகத்தின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை என்பதையும் வாசகர்கள் கருத்தில் கொள்க.

2019 ஆம் ஆண்டில்இ பேர்னில் உள்ள தமிழ் தேவாலயத்தின் தலைவர் குமார் வில்லியம்ஸ். இவர் மீது பல இளம் பெண்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பெண்கள் அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினர். அவர்களில் ஒருவர் தனக்கு 13 வயதுதான் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் வில்லியம்ஸ் தன்மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று அரசு வழக்கறிஞர் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து வில்லியம்ஸ் மீண்டும் தேவாலயத்தின் தலைவரானார்.
இந்நிலையில் வில்லியம்ஸ் பல பெண்களுடன் வீடியோ கோலில் ஆபாசமாக பேசுவது போன்று காணொளிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுவிட்சர்லாந்தின் SRF “Rundschau” க்கு இந்த காணொளிகள் சிக்கியதை அடுத்து இவ்விடயம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு வீடியோவில் அவர் அந்த பெண்ணிடம் ஆடைகளை கழட்டும் படி கேட்பதும் முத்தம் கேட்பதுமாக ஆபாசமாக பேசி அரட்டை அடிப்பது பதிவாகியுள்ளது.
இவருடைய இந்த வீடியோக்கள் கோடை காலத்தில் இருந்து பரவி வருவதாகவும்இ சர்ச் சமூகத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் முன்னாள் தேவாலய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடியோக்கள் பரவத் தொடங்கியதில் இருந்துஇ அதிகமான பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்லுவதற்கு முன்வருவதாகவும் குறிப்பிட்ட ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான ஆதாரங்களை திரட்ட முற்பட்ட போது ஆரம்பத்தில் 10 முதல் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சிறார்களும் அடங்குவார்கள் என சொல்லப்படுகிறது.
இது பற்றி ஊடகங்களுக்கு இரண்டு பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் வில்லியம்ஸ் பற்றி குறிப்பிடுகையில் அவர் தன்னை ஒரு கர்த்தரின் தேவதை என்று கூறிக்கொண்டுஇ நான் சிறுமியாக இருந்தபோதும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்று கூறினார்.
மற்றொரு பெண்ணும் போதகரின் பாலியல் துஷ்பிரயோக முயற்சிகள் குறித்து புகார் அளித்துள்ளார். அவளும் அப்போது மைனர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்து போதகர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.; அவரது வழக்கறிஞர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதோடு அவற்றில் சில வதந்திகள் எனவும் குறிப்பிடுகிறார்.
போதகரின் சில விசுவாசிகள் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வில்லியம்ஸ் ஒரு சதிவலையில் சிக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும்இ நவம்பர் 2023 இல் அவர் ராஜினாமா செய்யப்போவதான அறிவிப்புகள் குறித்து சந்தேகங்களை எழுப்புவதாகவும் அது தொடர்பான ஆடியோ பதிவுகள் தம்மிடம் உள்ளதாகவும் குறிப்பிட்ட ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல பெண்கள் புகார் அளித்ததால்இ அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்போது போதகருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Source:-
https://www.srf.ch/news/schweiz/vorwurf-sexueller-missbrauch-tamilischer-pastor-erneut-unter-druck
https://www.20min.ch/story/kanton-bern-minderjaehrige-glaeubige-missbraucht-pastor-erneut-unter-druck-103027625
முக்கிய குறிப்பு :- இவரது ஆபாச அரட்டை தொடர்பான அனைத்து காணொளிகளும் எமது ஊடகத்திடம் உள்ளது. சுவிட்சர்லாந்தின் ஊடக சட்டதிட்டங்களுக்கேற்ப பொதுவெளியில் அவற்றை தவர்த்திருக்கிறோம். தேவையெனில் அவை தேவையான இடத்தில் வெளியிடப்படும்.